1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2022 (09:34 IST)

இன்று அறிமுகமாகிறது குட்டி கேஸ் சிலிண்டர்கள்! – சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி!

Mini Gas Cylinder
தமிழ்நாட்டில் நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோர் நலம் பெறும் விதமாக குட்டி சிலிண்டர்கள் இன்று அறிமுகப்படுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் சிறு வியாபாரிகள், நடைபாதை உணவகங்களுக்கு உதவும் வகையில் 2 கிலோ மற்றும் 5 கிலோ எடை கொண்ட இரண்டு குட்டி கேஸ் சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் இன்று இந்த சிலிண்டர்களை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைக்கிறார். 2 கிலோ கேஸ் சிலிண்டருக்கு ‘முன்னா’ எனவும், 5 கிலோ கேஸ் சிலிண்டருக்கு ‘சோட்டு’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிறிய கேஸ் சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

இன்று முதற்கட்டமாக திருவெல்லிக்கேணி கூட்டுறவு சங்கத்தின் சுயசேவை பிரிவுகள் மூலம் இந்த கேஸ் சிலிண்டர்கள் விற்பனை தொடங்கப்படுகிறது. இந்த கேஸ் சிலிண்டர்களை பெற எதாவது ஒரு அடையாள அட்டையை மட்டும் சமர்பித்தல் போதும் என கூறப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K