வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 6 அக்டோபர் 2022 (14:25 IST)

பெண் மருத்துவர்கள் இருவரை இடமாற்றம் செய்ய பரிந்துரைத்த அமைச்சர்கள் !

duraimurugan
வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு உட்பட்ட  பொன்னிய அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும்  மா. சுப்பிரமணியன், பெண் மருத்துவர்கள் இருவரை இடமாற்றம் செய்ய பரிந்துரைத்தனர்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ளன.

இந்த நிலையில், இன்று , வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு உட்பட்ட  பொன்னிய அரசு ஆரம்பச் ச்ஒகாதார நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும்  மா. சுப்பிரமணியன்,  மலைப்பகுதி என்பதால் அங்கு பாம்புக் கடிக்கான  மருத்ததுகள் இல்லை; மருத்துவர்களும் பணியில் இல்லை  என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தததை அடுத்து, பெண் மருத்துவர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்ய  மா சுப்பிரமணியன் பரிந்துரைத்தார்.

அப்போது,அமைச்சர் துரைமுருகன் யாரும்மா நீ எந்த ஊரு என்று கேட்டு,  நீ இவரை கன்னியாகுமரிக்கு தூக்கி அடிங்க என்று கூறினார்.

Edited by Sinoj