திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (15:15 IST)

குஜராத்தியில் பட்டையை கிளப்பிய தமிழக வீராங்கனைகள்! – தேசிய விளையாட்டு தொடரில் சாதனை!

Sports
குஜராத்தில் நடந்து வரும் தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.

தேசிய விளையாட்டுத் தொடர் குஜராத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த தொடரில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு வகையான போட்டிகளில் போட்டியிட்டு வருகின்றனர்.


இதில் கோலூன்றி தாண்டுதல் போட்டியும் நடைபெற்றது. இந்த போட்டியில் அதிக உயரம் கோலூன்றி தாண்டி ரோஸி மீனா பால்ராஜ் 4.20 மீட்டர் உயரத்தை லாவகமாக தாண்டி முதல் இடத்தை பிடித்தார்.

அதை தொடர்ந்து பவித்ரா வெங்கடேஷ் இரண்டாம் இடத்தையும், பரணிகா இளங்கோவன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். கோலூன்றி தாண்டும் விளையாட்டில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களையும் தமிழக வீராங்கனைகளே பெற்றுள்ளது குறித்து பலரும் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

Edited By: Prasanth.K