வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2022 (08:43 IST)

பொன்னியின் செல்வன் வசூல் : ஐந்து நாளில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி ஏகோபித்த வரவேற்போடு உலகமெங்கும் ஓடிக் கொண்டு இருக்கிறது.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் 3 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் எனும் மைல்கல்லை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் இந்த மைல்கல்லை எட்டும் ஐந்தாவது படமாக பொன்னியின் செல்வன் அமைந்துள்ளது.