1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu rain chances for upcoming days

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சியால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக சில இடங்களில் கனமழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக மழை பொழிவு குறைந்திருந்தது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, சென்னை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
தி.மு.க ஆட்சியில் மக்கள் வேதனையுடன் உள்ளனர்: எடப்பாடி பழனிசாமி