1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 செப்டம்பர் 2018 (14:07 IST)

தமிழிசையை கலாய்த்தால் பொறுக்க மாட்டேன் - பூசாரி உண்ணாவிரதம்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை சமூகவலைத்தளங்கலில் பலரும் கிண்டலடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தை சேர்ந்த பூசாரி ஒருவர் உண்ணாவிரதம் இருந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்தில் பாஜக மலர்ந்தே தீரும் என உரக்கக் கூறி வலம் வருபவர். தமிழகத்தில் எப்படியும் ஒரு நாள் பாஜக ஆட்சி அமையும் என அவர் தொடர்ந்து நம்பிக்கையுடன் கூறி வருகிறார். ஆனால், சமூக வலைத்தளங்களில் பாஜகவிற்கு எதிராகவும், தமிழிசையை கிண்டலடித்தும் பல மீம்ஸ்கள் வலம் வருகின்றன.
 
பல பேட்டிகளில் இதுகுறித்து தமிழிசை காட்டமாகவும், சில சமயம் நகைச்சுவையாகவும்  கருத்து தெரிவித்து வருகிறார்.
 
இந்நிலையில், சேலம் சாமிநாதபுரத்தில் வசித்து வரும் சதீஷ்குமார், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவகம் எதிரே கையில் ஒரு பாதகையுடன் வந்தார். அதன் தீடீரென கீழே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

 
அவர் கையில் வைத்திருந்த பாதகையில் “தமிழிசை அம்மா அவர்களை சமூக வலைத்தளங்களில் இழிவு படுத்துவோர்களை கைது செய்ய வேண்டி உண்ணாவிரதம்” என எழுதப்பட்டிருந்தது.
 
இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி, இப்படி அனுமதி பெறாமல் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என அவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
 
இவர் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் பூசாரியாக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.