மு.க.ஸ்டாலினுக்கு அறுவை சிகிச்சை - அப்போலோ அறிக்கை

MK Stalin
Last Modified வியாழன், 27 செப்டம்பர் 2018 (10:09 IST)
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சென்னை அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 
மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் எதற்காக அனுமதிக்கப்பட்டார், அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகதால் திமுகவினரிடையே சற்று பதட்டம் ஏற்பட்டது. 

 
இந்நிலையில், அப்போலோ நிர்வாகம் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வலது தொடையில் இருந்த சிறிய அளவிலான நீர்க்கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. சிகிச்சை முடிந்து இன்று மாலை அவர் வீடு திரும்புகிறார்’ எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :