வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 செப்டம்பர் 2018 (20:56 IST)

தமிழகத்தில் ஆளுநர் தூங்கி கொண்டு இருக்கிறார்: அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தின் ஆளுனர் தூங்கி கொண்டிருப்பதாக பாமக இளைஞரணி தலைவரும் மக்களவை எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் ஆளுனர் தூங்கி கொண்டிருப்பதாகவும், இதனை தலைப்பு செய்தியாக போடவும் என்றும் பத்திரிகையாளர்களை கேட்டு கொண்டார்.

இந்த ஆட்சியில் ஊழல் நடைபெறுவது குறித்து கடந்த டிசம்பர் மாதம் ஆதாரத்துடன் நேரில் ஆளுனரை சந்தித்து புகார் கொடுத்ததாகவும், இந்த புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கின்றேன் என்று கூறிய ஆளுனர் இதுநாள் வரை ஒன்றுமே செய்யவில்லை என்றும் அன்புமணி கூறினார்.

இதுநாள் வரை ஆளுனர் மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லாததால் அவர் நல்லவர் என்று தான் நம்பிக்கொண்டிருப்பதாகவும் இனிமேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் ஆளுனர் மீதுதான் குற்றம் சொல்லவிருப்பதாகவும் அன்புமணி மேலும் கூறினார்.