கனடா வாழ் தமிழர்களின் நிலை என்ன? தமிழக அரசு அவசர ஆலோசனை
கடந்த சில நாட்களாக இந்தியா மற்றும் கனடா இடையே பெரும் பிரச்சனை எழுந்துள்ள நிலையில் கனடாவுக்கான இந்திய தூதரை அந்நாட்டு அரசு வெளியேற்றியுள்ளது என்பதும் அதேபோல் இந்தியாவுக்கான கனடா தூதரை மத்திய அரசு வெளியேற்றி உள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கனடாவில் தமிழர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு ஏதும் பிரச்சனை ஏற்படாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
இந்த நிலையில் கனடா வாழ் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்ட தயார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கனடா வாழ் தமிழர்களுக்கு விரைவில் உதவி எண்கள் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கனடா வாழ் தமிழர் நிலைமை குறித்து தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva