செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (16:53 IST)

தமிழகத்திற்கு கூடுதலாக 23 லட்சம் தடுப்பூசிகள்: மத்திய அரசு அறிவிப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. அந்த வகையில் தமிழகத்திற்கு  இருபத்தி மூன்று லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதத்தில் 79 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் கூடுதலாக இருபத்தி மூன்று லட்சம் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று 9 லட்சம் தடுப்பு மருந்துகள் சென்னைக்கு வந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து இந்த தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்படும் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்