1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (15:25 IST)

டீனேஜ் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்! ஆளே அடையாளமே தெரியல!

நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய பதின் பருவ கால புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். தமிழில் இப்போது அவர் கைவசம் ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது. தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து திரைத்துறையில் இயங்கி வரும் சினிமா மன அழுத்தம் மிகுந்த துறை எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது தன்னுடைய டீனேஜ் கால புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். ஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாத விதத்தில் அந்த புகைப்படங்கள் உள்ளன என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.