செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (15:35 IST)

வெளிநாட்டு திரைப்பட விழாவில் விருது பெற்ற மஹிமா நம்பியார்!

நடிகர் அருள்நிதியை ஒரு கவனித்தக்க நடிகராகவும் அவருக்கென ஒரு மார்க்கெட்டையும் உருவாக்கிய படம் மௌனகுரு. வித்தியாசமான திரைக்கதை மற்றும் அருமையான கதாபாத்திர வடிவமைப்பால் ட்ரெண்ட்செட்டர் படமாக இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அவர் இயக்கிய படம்தான் ஆர்யா நடித்த மகாமுனி திரைப்படம். அந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக சுமாராகவே போனது.

இந்நிலையில் ரிலிஸாகி 2 ஆண்டுகள் கழித்து இப்போது பல வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் பரிசுகளை வென்று வருகிறது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படத்தில் நடித்த மஹிமா நம்பியார் சிறந்த துணைக் கதாபாத்திர விருது பெற்றுள்ளார்.