எல்லையோர மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு இல்லையா?
கேரள மாநில எல்லையோர மாவட்டங்களில் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் மற்ற பகுதிகளில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது
செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க திட்டமிட்டுள்ள நிலையில் கேரள மாநிலத்தில் தினமும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்
இந்த நிலையில் இன்று முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனையில் கேரள மாநில எல்லையில் உள்ள மாவட்டங்களில் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடரலாம் என்றும் மற்ற மாவட்டங்களில் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் முதல்வருக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது
இதனை அடுத்து கேரள மாநில எல்லையோர உள்ள மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது