திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (09:33 IST)

தமிழ் மொழியை காக்க வேண்டும்.. சாதி, மத பேதம் ஒழிக்க வேண்டும்! - த.வே.க உறுதி மொழியில் இடம்பெற்றவை!

Thamizhaga Vetri Kazhagam

இன்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கொடி வெளியாக உள்ள நிலையில் கட்சி உறுதி மொழி வெளியாகியுள்ளது.

 

 

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் அதன் மூலமாக எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளார். அதற்கு முன்னதாக இன்று கட்சியின் கொடி வெளியாக உள்ளது. இதுகுறித்து விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி வெளியாகியுள்ளது.

 

அந்த உறுதிமொழியானது: நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

 

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
 

 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும், நம்பிக்கை வைத்து அனைவருடனும் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

 

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என உளமார உறுதிக் கூறுகிறேன்

 

Edit by Prasanth.K