ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2024 (17:49 IST)

தமிழக வெற்றிக் கழகத்திற்காக பிரத்யேக பாடல்கள்.. எழுதியவர் யார் தெரியுமா?

தமிழக வெற்றிக் கழகத்திற்காக பிரத்யேக பாடல்கள் எழுதப்படுவதாகவும், இந்த பாடல்கள் கவிஞர் விவேக் வரியில், இசையமைப்பாளர் தமன் இசையில் முழு வீச்சில் தயாராகி வருவதாகவும் இந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பாடல்கள் நாளை கொடியேற்றும் விழாவின்போது ஒலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் கட்சிக்கான பாடல்களை நாளை வெளியிடுவது குறித்து  இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் தவெக வட்டாரம் கூறுகிறது. மேலும் நாளை தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுக விழாவில், கட்சி தலைவர் விஜய் பேசுவதற்கான வாய்ப்பு குறைவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும்  கவிஞர் விவேக் வரியில் மற்றும் இசையமைப்பாளர் தமன் இசையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பாடல்கள் நாளை அறிமுகமாகும் என அக்கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Edited by Siva