1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 30 ஜூன் 2023 (14:24 IST)

உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன்; சைலேந்திரபாபு உருக்கமான கடிதம்..!

Sylendra Babu
உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன் என இன்றுடன் ஓய்வு பெறும் டிஜிபி சைலேந்திரபாபு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன், துறை நமக்கு செய்ததை போன்று, துறைக்கு நாம், கைமாறு செய்ய வேண்டும். பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன், பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்;
 
பொதுமக்கள் மனதில் இடம்பிடிப்பது நமது லட்சியமாக இருக்க வேண்டும், 
குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, உண்மை தன்மையை கண்டறிந்து திருத்தி கொள்ளவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran