1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 8 ஜனவரி 2025 (08:00 IST)

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பாஸ்போர்ட் ரத்து; வங்கதேச அரசு அதிரடி நடவடிக்கை

Hasina
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பாஸ்போர்ட் ரத்து செய்து, வங்கதேச அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு பாரபட்சம் காட்டுவதாக வங்கதேச மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதன் காரணமாக சுமார் 400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதனால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறினார். அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய அரசு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகளை தொடுத்து வருகிறது.

நேற்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் இரண்டாவது முறையாக ஷேக் ஹசீனாவுக்கு வாரண்ட் பிறப்பித்துள்ளது. அவரை பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் அடிப்படையில், ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட்டை வங்கதேச அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Siva