1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 ஜூன் 2023 (14:30 IST)

முன்னாள் டிஜிபி விஜயகுமார் தாயார் மறைவு: சசிகலா இரங்கல்

முன்னாள் டிஜிபி திரு.விஜயகுமார் IPS அவர்களின் தாயார் கௌசல்யா அவர்கள் மறைந்துள்ள நிலையில் சசிகலா இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 
 
முன்னாள் டிஜிபி திரு.விஜயகுமார் IPS அவர்களின் தாயார் கௌசல்யா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஒரு நேர்மையான அதிகாரியை நாட்டுக்காக அர்ப்பணித்த இந்த ஒப்பற்ற அம்மையாரின் இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது.
 
திரு.விஜயகுமார் அவர்கள் மிகவும் நேர்மையானவர், பணிகளை நேர்த்தியாக செய்யக்கூடியவர் என்பதை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அடிக்கடி என்னிடம் சொல்லிகொண்டே இருப்பார்.  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நன்மதிப்பை பெற்ற அதிகாரிகளில் ஒருவராக விளங்கியவர் திரு.விஜயகுமார் அவர்கள். 
 
தனது தாயை இழந்து இருக்கும் இந்த கடினமான நேரத்தில் திரு.விஜயகுமார் அவர்களுக்கு மனவலிமையையும், தைரியத்தையும் வழங்க ஆண்டவன் அருள்புரிய வேண்டும். திரு.விஜயகுமார் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
 
Edited by Mahendran