புதிய இஸ்ரோ தலைவராக தமிழர் நியமனம்.. குவியும் வாழ்த்துக்கள்..!
புதிய இஸ்ரோ தலைவராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இஸ்ரோ தலைவராக தற்போது இருக்கும் சோமநாத் அவர்களின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடைகிறது. இந்த நிலையில், புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஜனவரி 14ஆம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றார் என்று அமைச்சரவை நியமன குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரோவில் புகழ்பெற்ற விஞ்ஞானியாக பணியாற்றி வரும் நாராயணன் அவர்கள், இந்திய விண்வெளி துறையில் பல்வேறு முக்கிய பதவிகளை ஏற்கனவே வகுத்துள்ளார். இஸ்ரோவின் சந்திராயன் 2 மற்றும் சந்திராயன்-3 திட்டங்களிலும் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் என்பவர் பணியாற்றிய நிலையில், தற்போது மீண்டும் ஒரு தமிழர் இஸ்ரோ அமைப்பின் தலைவராக உள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சிவன் போலவே, இவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva