முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று அந்த மாவட்டத்தின் ஆட்சியாளர் லட்சுமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் இரண்டு பேர் மற்றும் இந்திய அளவில் ஏழு பேர் ஹெச்எம்பிவி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நோய் தொற்றால் உடலில் பெரிய பாதிப்பு ஏற்படாது என்றும் எனவே அச்சப்பட தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் நோய் பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கர்நாடக எல்லையை ஒட்டி நீலகிரி மாவட்ட பகுதி அமைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது ஏழு பேர் ஹெச்எம்பிவி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது
Edited by Siva