திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 ஜூன் 2023 (13:15 IST)

நாளையுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஓய்வு.. புதிய தலைமை செயலாளர் யார்?

TN assembly
நாளையுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற இருப்பதை அடுத்து புதிய தலைமைச் செயலாளர் யார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. 
 
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தலைமைச் செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டார் என்பதும் அவர் சிறப்பாக பணிபுரிந்து வந்தார் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் நாளை உடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற இருக்கும் நிலையில் புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா என்பவர் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 
 
சிவதாஸ் மீனா தற்போது நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து வரும் நிலையில் அந்த பதவியை கார்த்திகேயனுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் டிஜிபி பகுதியில் இருந்து சைலேந்திரபாபு ஓய்வு பெற இருப்பதை அடுத்து அந்த பதவிக்கு நியமனம் செய்யப்படுவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
Edited by Mahendran