Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் மனசு வைத்தால் விஜய் வந்துவிடுவார்!.. சிவக்குமார் பேட்டி!...

Written By Mahendran
Updated: செவ்வாய், 10 பிப்ரவரி 2026 (11:29 IST)
விஜயகாந்த்துக்கு பின் நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பின் வாங்கினார். ஆனால் ரஜினியே எதிர்பார்க்காத வகையில் நடிகர் கமல் அரசியலுக்கு வந்தார்.அதேநேரம் கமலுக்கு அரசியலில் மக்கள் பெரிய அளவில் ஆதரவு கொடுக்கவில்லை. கோவையில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கமல் தோற்றுப் போனார்..

தற்போது திமுகவுடன் இணக்கமாக போனதால் அவருக்கு எம்பி பதவிவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒருபக்கம் நடிகர் விஜயும் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த சில மாதங்களாகவே அவர் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.. ஈரோட்டில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு பின் தற்போது வருகிற 13-ஆம் தேதி சேலத்தில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் விஜய் பேசவிருக்கிறார்..

எல்லா மேடைகளிலும் அதிமுக, திமுக போன்ற கட்சிகளை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு ஓட்டு எங்களுக்கு கிடைக்கும்.. திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றெல்லாம் பேசி வருகிறார். இதையடுத்து அதிமுகவினரும், திமுகவினரும் விஜய் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்..

இந்நிலையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியவரின் தந்தையும், நடிகருமான சிவகுமார் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது விஜயின் அரசியல் வருகை குறித்து அவரிடம் கேட்டபோது ‘விஜய் வந்தே ஆக வேண்டும் என மக்கள் நினைத்தால் யாரும் தடுக்க முடியாது.. அவர் வந்து விடுவார்’ என சொல்லியிருக்கிறார்...<>

எல்லாம் காட்டு

ஆட்சியை கவிழ்க்க திட்டம் போடுகிறாரா டிடிவி தினகரன்?!.. நடப்பது என்ன?...

ஜெயலலிதா கூட இப்படி திமுகவை கடுமையாக விமர்சித்ததில்லை: அரசியல் விமர்சகர்கள்...

விஜய் தொடர்ந்து இதே வேகத்தில் அரசியல் தாக்குதல்களை முன்னெடுத்தால்.. திமுக அவ்வளவு தான்...

சர்க்காரியா கமிஷன்.. நேருக்கு நேர் முதல்வர் விஜய் விவாதிக்க தயாரா? ஆர்.எஸ்.பாரதி

கேஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் கட்டுப்பாடு தளர்வு!.. மத்திய அரசு உத்தரவு..

அடுத்த கட்டுரையில்
Show comments