11வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்: ஜாமீன் கிடைக்குமா?

புதன், 22 நவம்பர் 2023 (14:32 IST)
பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் ஏற்கனவே 10 முறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 11 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரை டிசம்பர் நான்காம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு  விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பதினோராவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உச்ச நீதிமன்றத்தில்  ஜாமீன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran

எல்லாம் காட்டு

நெதன்யாகு நியூயார்க் வரும்போது கைது செய்வேன்!.. நகர மேயர் காட்டம்!..

பள்ளி, மருத்துவமனைகளில் ஜங்க் புட் விற்பனைக்கு தடை!.. கர்நாடக அரசு அதிரடி...

விட்டாச்சு லீவு!.. FIFA உலக கோப்பை இறுதி போட்டிக்கு விடுமுறை அறிவித்த கேரளா!..

நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டீர்கள்.. விடுமுறைக்கு சென்ற ஊழியருக்கு வந்த இமெயில்..

நள்ளிரவில் ஆடையின்றி தெருவில் ஓடிய இளம்பெண்.. அதன்பின் நடந்த விபரீதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments