ஞாயிறு, 3 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2023 (20:36 IST)

சிப்காட் போராட்டத்தில் கைதான விவசாயிகளுக்கு ஜாமீன்

Farmers Arrest
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் அமைப்பதற்கு எதிரான  போராட்டத்தில் கைதான விவசாயிகளுக்கு  இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் அமைப்பதற்கு எதிரான  போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கடந்த 4 ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 20 விவசாயிகளில் 19 விவசாயிகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்து இடவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.