1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2023 (14:15 IST)

பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை ஜாமீனில் வெளியே வந்து கொன்ற சகோதரர்கள்

Death
உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள கவுஷாம்பி  மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள   கவுஷாம்பி  மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு  ஒரு சிறுமியை, பவான் நிஷாத் என்ற குற்றாவாளி பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், தற்போது 19 வயதாகும், அந்தச் அப்பெண்ணிடம் வழக்கைத் திரும்ப பெற  வேண்டுமென பவான் நிஷாத் மிரட்டியதாகவும், இதற்கு அப்பெண் மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்த பவான் நிஷாத் தனது சகோதரர் உடன் இணைந்து அப்பெண்ணை கோடாரியால்  வெட்டிக் கொன்றுள்ளார்.

பவானின் சகோதரர் அஷோக் வேறொரு கொலை வழக்கில் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தவர்  ஆவார். தற்போது இருவரும் தலைமறைவாகியுள்ள நிலையில், போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.