ஞாயிறு, 16 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2023 (21:07 IST)

கஞ்சா வழக்கில்,2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

கஞ்சா வழக்கில்,2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
திருப்பூர் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா வழக்கில்,2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
திருப்பூர் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஸ்ரீ முருகன் இருசக்கர வாகனம் நிறுத்தும் அருகில் கடந்த செப்டம்பர் மாதம் 7. தேதி கஞ்சா விற்றதாக திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகரைச் சேர்ந்த ஹரிஹரசுதன் என்கின்ற சுதன் வயது.20 மற்றும் ஜனா நகர் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்கின்ற பொறி ராம் உள்ளிட்ட இரண்டு பேரையும் நல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் .

மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஹரிஹரசுதன் சுதன் ராம்குமார் ஆகியோர் தொடர்ந்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்ற வழக்கில் ஈடுபட்ட பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். பொது சுகாதார பராமரிப்பது குந்தகமான வகையில் செயல்பட்டு வந்த இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினவ் உத்தரவிட்டுள்ளார். இதற்கான ஆணையை போலீசார் சிறைத்துறை போலீஸாரிடம் வழங்கினார்கள்