திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 நவம்பர் 2023 (10:27 IST)

மது பாரில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட இளம் பெண்கள்.. போலீசாரை கண்டதும் அலறியடித்து ஓட்டம்..

சென்னை நந்தனம் பகுதியில் தனியார் மதுபாரில் நள்ளிரவில் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மது போதையில்  ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த நிலையில் போலீசாரை கண்டதும் அலறி அடித்து ஓடியதாக வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

சென்னை நந்தனம் பகுதிகளில் உள்ள பிரபலமான தனியார் மது பாரில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் மது போதையில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போடுவதாக காவல்துறைக்கு புகார் வந்தது  

இந்த புகார் குறித்து விசாரணை செய்ய காவல்துறையினர் வந்ததை பார்த்ததும் ஆட்டம் பாட்டத்தில் இருந்த இளம் பெண்கள் இளைஞர்கள் பதறியபடி வெளியேறினர். இளம் பெண்கள் தங்கள் முகத்தை மறைத்து மது போதையில் ஓட்டம் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து காவல்துறையினர் முழு விசாரணை செய்து வருவதாகவும் மது பாரில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Edited by Mahendran