Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக மேடையில் பேசுவது ஒன்று... செயல்பாட்டில் வேறொன்று -வானதி சீனிவாசன்

Written By Sinoj
Updated: புதன், 22 நவம்பர் 2023 (14:06 IST)
தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருந்த நிலையில் 'திமுக மேடையில் பேசுவது ஒன்று... செயல்பாட்டில் வேறொன்று ' என்று பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருந்தார்.

மேலும், சாதியை ஒழிக்கத்தான் திமுக போராடி வருவதாகவும் கூறினார்... ஆனால் நடப்பதோ வேறு .... விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியின் நகர மன்ற துணைத்தலைவராக பட்டியலின பெண்ணான ராஜலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார்.

பட்டியலின சமூகம் என்பதால் சாதிய ரீதியில் மரியாதை வழங்காமல் திண்டிவனம் நகராட்சி தலைவர் செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு கூட அழைத்து சென்று ஆய்வு செய்வதில்லை..தனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கூட வழங்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். திமுக மேடையில் பேசுவது ஒன்று... செயல்பாட்டில் வேறொன்று என்பதை இந்த சம்பவம் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

தவெக இமேஜை அடிச்சி காலி பண்ணனும்!.. பக்கா ஸ்கெட்ச் போடும் உதயநிதி!...

இளைஞர்கள் என்னை திட்றாங்க!.. அவங்களை மன்னிச்சிட்டேன்!.. பிரதமர் மோடி உருக்கம்!...

சின்ன மோடி பேச மாட்டார்!. ஏன் பயப்படுறீங்க?.. பாராட்டுவிழா நடத்துங்க!.. புளூசட்ட மாறன் நக்கல்!...

இண்டர்வியூவுக்கு வர முடியாது.. வேலைக்கு விண்ணபித்த இளைஞரின் மெசேஜால் பரபரப்பு..

20 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா வரும் தஸ்லிமா நஸ்ரின்.. மேற்கு வங்க பாஜக அரசு வரவேற்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments