பேருந்தில் ஓசிப்பயணம்: அமைச்சர் பொன்முடிக்கு சீமான் கண்டனம்
திமுக ஆட்சியில் தான் பெண்கள் பேருந்துகளில் ஓசி பயணம் செய்கிறார்கள் என தமிழக அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகி நிலையில் இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய போது தமிழகத்தில் பெண்கள் ஓசியில் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் என்று பேசினார்
அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து சீமான் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அரசு பேருந்துகள் எங்களின் வரிப்பணத்தில் தான் வாங்கப்பட்டது என்றும் எங்களால்தான் பேருந்துகளை வாங்கப்பட்டது என்றும் உங்கள் பணத்தில் வாங்கவில்லை என்றும் சீமான் தெரிவித்துள்ளார்
மேலும் பேருந்தில் பெண்கள் ஓசி பயணம் செய்யவில்லை என்றும் அமைச்சர் பொன்முடிக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்