தொடர்புடைய செய்திகள்
- இங்கிலாந்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: இந்து - முஸ்லிம் சர்ச்சையால் உள்ளூர் மக்கள் கவலை
- ஆந்திர முதல்வரின் செயலால் அதிருப்தி அடைந்த ஜூனியர் என் டி ஆர் !
- மகனின் கைது நடவடிக்கை குறித்து முதல்முறையாக கருத்து தெரிவித்த ஷாருக்கான் மனைவி!
- ஒரே ஆண்டில் பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
- ’விக்ரம் வேதா’ இந்தி படம் குறித்த மாஸ் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர்!
காந்தி ஜெயந்தியன்று ஆர்.எஸ்.எஸ். பேரணி… சீமான் கண்டனம்!
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல்.
இது குறித்து அவர் விரிவாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தமிழகத்தில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காந்தி ஜெயந்தியன்று, அவரது படுகொலைக்காகத் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். எனும் மதவாத இயக்கத்தின் பேரணிக்கு மாநிலத்தின் 50 இடங்களில் அனுமதி அளித்திருப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.
மதப்பூசல்களை அனுமதியாது எப்போது அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கும் முடிவானது மிகத்தவறான முன்னுதாரணமாகும். மக்கள் நலனென்பது துளியுமற்று, மதவாத அரசியலையும், பிரித்தாளும் சூழ்ச்சியையும் கையிலெடுத்து, நாட்டைத் துண்டாடி அதன்மூலம் அரசியல் இலாபமீட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பேரணியை தமிழக மண்ணில் அனுமதிப்பதென்பது மத நல்லிணக்கத்துக்கும், சமூக அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் பேராபத்தாகும்.
ஆகவே, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
