பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், இன்றும் பங்குச்சந்தை ஏற்றம் கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கிய நிலையில், அதன் பின் சில நேர்மறை செய்திகள் வந்ததன் காரணமாக தற்போது ஏற்றத்தில் உள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 73 புள்ளிகள் உயர்ந்து 77,678 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 33 புள்ளிகள் உயர்ந்து 23,674 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் கோடக் மகேந்திரா வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், கோல் இந்தியா, ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, ஆசியன் பெயிண்ட், டைட்டான், ஸ்டேட் வங்கி, அப்போலோ ஹாஸ்பிடல் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், எச்டிஎப்சி வங்கி, டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, டி.சி.எஸ், சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், சிப்லா, இண்டஸ் இண்ட் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva