வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (13:51 IST)

பெட்ரோல் குண்டுகளை வீசுவது இஸ்லாமியர்களா? பாஜகவா? - சீமான் கேள்வி

Seeman
தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,
 
இந்த நிலையில் பெட்ரோல் குண்டுகளை வீசுவது இஸ்லாமியர்களா? அல்லது பாஜகவினர்களா? என்ற கேள்வியை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார் 
 
பெட்ரோல் குண்டுகளை வீசுவது உண்மையிலேயே இஸ்லாமியர்களா? அல்லது பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களா? என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். 
 
கடந்த காலங்களில் பாஜகவினர் தங்கள் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி மற்றவர்கள் மீது பழி போட்டதற்கு ஆதாரம் உள்ளது என்றும் சீமான் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.