வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 26 செப்டம்பர் 2022 (18:19 IST)

''ஓசியில் தானே பஸ்ஸில் பயணம்..''அமைச்சரின் பேச்சுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

dinakaran
அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து ‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர்  பொன்முடியின் பேச்சுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

தமிழகத்தில் கடந்த ஆண்டு  நடந்த சட்டசபைத் தேர்தலில்  முக ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் கைப்பற்றியது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை நடந்து வருகிறது.

தேர்தல் அறிக்கையின்படி, மக்களுக்கு திட்டங்கள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டம் தமிழகத்தில்  நல்ல வரவேற்பை பெற்றுள்ள  நிலையில், அரசு விழா ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, ஓசியில் தானே பஸ்ஸில் பயணம் செய்கிறீர்கள் என்று பேசியது சர்ச்சையாகியுள்ளது.

இதற்கு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து ‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது.

அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது. பெண்கள் இலவசமாக அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், அவர்களை ஏளனமாக பேசக்கூடாது என முதலமைச்சர் திரு.ஸ்டாலின் கூறியிருந்தார். இது அவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா?


அமைச்சர்களுக்குப் பொருந்தாதா?  மூத்த அமைச்சர் ஒருவரே இப்படி பேசுகிறார் என்றால் தி.மு.க.வினரின் உண்மையான மனநிலை எது என்பதை நம்மால் உணர முடிகிறது. பெண்களை இப்படி இழிவுபடுத்துவதும் தி.மு.க.வினர் கண்டுபிடித்திருக்கும் திராவிட மாடலின் அங்கம்தானோ?!  என்று பதிவிட்டுள்ளார்.