திங்கள், 31 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 மார்ச் 2025 (10:38 IST)

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜானை முன்னிட்டு இந்தியர்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க அரபு அமீரகம் உத்தரவிட்டுள்ளது.

 

இஸ்லாமிய புனித பண்டிகையான ரம்ஜான் இந்த மாத இறுதியில் கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் புனித நாளை கொண்டாடும் விதமாக சிறைக் கைதிகள் சிலரை மன்னித்து விடுதலை செய்வது அரபு அமீரகத்தின் வழக்கமாக உள்ளது.

 

அதன்படி, இந்த ரம்ஜானில் 2000க்கும் மேற்பட்ட கைதிகளை கருணை அடிப்படையில் விடுவிக்க உள்ளனர். அதிபர் ஷேக் முகமது பின் சயீத் 1,295 கைதிகளையும், அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத் 1,518 கைதிகளையும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளனர்.

 

இந்த கைதிகளில் 500க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அவர்களை இந்தியா அனுப்பி வைப்பதற்கான பணிகளை அரபு அமீரகம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K