Daily Horoscope
✕

உச்சி பிள்ளையார் கோவிலில் மட்டுமே தீபம் - கோபத்தில் இந்து அமைப்பினர் தர்ணா

Updated: செவ்வாய், 24 நவம்பர் 2026 (18:31 IST)
பல வருடங்களாகவே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால் மலையில் உள்ள ஒரு கல் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என இந்த அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.  ஆனால், அதை தமிழக அரசு ஏற்கவில்லை.

இது தொடர்பான வழக்கில் நவம்பர் 24ம் தேதியான இன்று ஒரு நாள் மட்டும் இந்து அமைப்பினர் கூறிய இடத்தில் தீபம் ஏற்றுக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு அதை ஏற்காமல் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது.. ஒருபக்கம் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்து அமைப்பினர் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தமாறு தமிழக அரசு உத்தரவிட்டனர்.

ஆனால் அது பின்பற்றப்படவில்லை. வழக்கம் போல் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் மட்டுமே இன்று மாலை தீபம் ஏற்றப்பட்டது. அதோடு இந்த அமைப்பினரை கோவிலுக்கு மேலே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த இந்து அமைப்பினர் பலரும் கோவிலின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தீபம் ஏற்றாமல் நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம் என அவர்கள் முழக்கமிட்டு வருகிறார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி வருகிறார்கள். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

அருள் விக்னேஷ் மீதான புகார்!.. திருப்பூர் மாவட்ட எஸ்.பி. விசாரணை அதிகாரியாக நியமிப்பு

தீபத்தூணில் தீபம் ஏற்றும் உத்தரவை அமுல்படுத்துங்க.. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு...

விஜய் ஆட்சியில் நிதிநிலைமை .. வருவாய் ரூ.1.71 லட்சம் கோடியைத் தாண்டியது....

வைரமுத்து மீது சின்மயி புகார் கொடுத்தபோது அன்றைய அரசு நடவடிக்கை எடுத்ததா? விர்ச்சுவல் வாரியர்ஸ் கேள்வி...

மீண்டும் அன்பில் மகேஷ் ஜாமின் மனு.. சென்னை ஐகோர்ட்டில் வாதம்.. இந்த முறையாவது கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments