ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By இரா காஜா பந்தா நவாஸ்
Last Modified: புதன், 22 ஜனவரி 2020 (15:41 IST)

ரஜினி எனும் மகா நடிகனின் வரலாற்று பிழைகள்!!

ரஜினி என்ற ஒரு மாபெரும் நடிகன் நாடகம் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் திரைக்கதை, வசனம், யார் என்பதை  ஊர் அறியும் ? நாம் அதை பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். 
 
தமிழர்களின் துன்பத்திலும், துயரத்திலும், வேதனைகளிலும் சற்றும் பங்குக்கொள்ளாத சூப்பர் ஸ்டார் ரஜினி தான் பெரு நிறைக் கிழவன் பெரியாரைப்பற்றி பேசுகிறார் !
 
முன்பு புதிய இந்தியா பிறந்தது என்றாரே அதே ரஜினி தான், புதிய தமிழகம் பிறக்கும் என்றாரே அதே வேஷதாரி ரஜினி தான் குகை வாழ் ஒரு புலி பெரியாரைப் பற்றி பேசுகிறார் !
 
காவேரி மேலாண்மை வாரியம் பற்றி வாய் திறந்தால் மோடிக்கு வலிக்குமே என்று வாயே திறக்காத அதே ரஜினி, தான் பெரியாரைப் பற்றி பேசுகிறார் ! தென்னக நதிகள் இணைப்பிற்காக நூறு முறை பிரதமரை சந்தித்த அதே ரஜினி தான் உயர் குணமேவிய தமிழர்கள் தந்தை பெரியாரைப் பற்றி பேசுகிறார் !
 
பெருங்கொட்டவன் பசியைப்போல அதிகார ருசிக்காக/ அதிகாரப்பசிக்காக பேசிக் கொண்டு இருக்கும் ரஜினி தான் பெரியாரைப் பற்றி பேசுகிறார் ! கருணாநிதி குரல் கேட்க ஆவல் என்றாரே அதே ரஜினி; வீர லட்சுமி, தைரிய லட்சுமி ஜெயலலிதா என்றாரே அதே ரஜினி, கருணாநிதி, ஜெயலலிதாவின் குரல்கள் ஒலித்த போது வாய் மூடி மௌனியாக இருந்த ரஜினி, தான் வெண் தாடி வேந்தன் பெரியாரைப் பற்றி பேசுகிறார்!
 
எதிர் மறை அரசியலை தவிருங்கள் என்று சொன்ன அதே காவி கலந்த அரசியல் வாதி  ரஜினி, தான் சிந்தனை மரம் ஒன்றை உருவாக்கி நிழல் தந்த பெரியாரைப் பற்றி பேசுகிறார்!
குடியுரிமை  திருத்தச்சட்டத்தால் இந்த நாடே தீப்பற்றி எறிகிறது. நாட்டின் புகழ்ப்பெற்ற பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் அனைத்தும் போராட்டக்களங்கள் ஆகி நிற்கிறது. இந்த நிலையில் தான் திருவாளர் மஹான் ரஜினி தனது திரு(நர) வாய் திறந்து வன்முறைகள் வேதனை தருகிறது என்றாரே அதே ரஜினி, தான் மண்ணில் தோன்றிய மகத்துவம் பெரியாரைப்  பற்றி பேசுகிறார்!
 
முன்பு ஒரு முறை தூத்துக்குடி செர்லைட் களத்தில்ப்   போராளிகளை அவமானப்படுத்தினாரே அதே  ரஜினி, தான் கசப்பாக இருந்தாலும், பிறர் அதிருப்தி அடைந்தாலும், உண்மையை மட்டும் பேசிய பெரியாரைப் பற்றி பேசுகிறார்!
 
உண்மையில் ரஜினி ஹச். ராஜாவை விட பயங்கரமானவர். பெரியாரை செருப்பால் அடிப்பேன்; பெரியார் சிலைகள் தகர்க்கப்படும் என்று சொன்ன ஒரு குள்ள நரி கூட்டத்தின் ஒரு குரலே ரஜினியின் குரல்.
 
Mr. ரஜினி,
பெரியார் தான் தமிழகம்
பெரியார் இல்லாமல் தமிழகமும்  இல்லை
தமிழர்களும் இல்லை
உங்களுக்கு என்ன ஆணவம் ?
தமிழகத்தால் தான் ரஜினி !
ரஜினியால் தமிழகம் இல்லை !  
கூத்தில் வேண்டுமானால் நீங்கள் ராஜா வேசம் கட்டலாம்  ஆனால் நிஜத்தில் உங்களுக்கு கூத்தாடி வேஷம் தான்.  ராஜா வேஷம் இல்லை Mr. ரஜினி. 
 

 
             இரா காஜா பந்தா நவாஸ்
                 ([email protected])