தர்பார் படத்தில் சசிகலாவை மறைமுகமாக விமர்சித்து வசனம் இருந்தால் உடனே நீக்க வேண்டும் சசிகலா வழக்கறிஞர் பேட்டி.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். இன்று உலகமெங்கும் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் வெளியாகியுள்ளது.
தர்பார் படத்தில் சிறை அதிகாரி ஒருவர் ரஜினியிடம், பணம் இருந்த ஜெயில்ல இருந்தே ஷாப்பிங் போறாங்க என்று கூறுவதாக வசனம் உள்ளது. இது சசிகலா சிறையிலிருந்து வெளியே ஷாப்பிங் போன விவகாரத்தை பகடி செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காட்சி குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் சசிகலா குறித்து தர்பார் படத்தில் வைக்கப்பட்டுள்ள கருத்து சரியானதுதான் என கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது சசிகலா தரப்பு. தர்பார் படத்தில் சசிகலாவை மறைமுகமாக விமர்சித்து வசனம் இருந்தால் உடனே நீக்க வேண்டும், நீக்காவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வினய்குமாரின் அறிக்கையில் சசிகலா ஷாப்பிங் சென்றதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.