செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 30 நவம்பர் 2024 (14:15 IST)

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் மற்றும் கனமழை காரணமாக, இன்று சென்னையில் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. இதை அடுத்து, சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இன்று இலவசமாக உணவு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே, புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை காரணமாக பல கடைகள் திறக்கப்படவில்லை. திரையரங்குகள், நகைக் கடைகள், ஜவுளி கடைகள் மற்றும் முக்கிய வணிக நிலையங்கள் இன்று மூடப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் ஏராளமான உணவகங்களும் ஹோட்டல்களும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், பொதுமக்கள் வசதிக்காக, இன்று ஒரு நாள் மட்டும் அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏராளமான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.


Edited by Mahendran