திங்கள், 9 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 30 நவம்பர் 2024 (15:29 IST)

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

வங்கக் கடலில் தோன்றிய ஃபெஞ்சல் புயல் இன்று மதியம் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும், சில இடங்களில் 90 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில், தற்போது வெளியிட்டுள்ள செய்தியில் வானிலை ஆய்வு மையத்தின் செய்தி குறிப்பில், முன்னதாக அறிவிக்கப்பட்டதை மாற்றி, இன்று மாலை புயல் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று மாலை புயல் கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் புதுவையிலும் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும் டிசம்பர் 2 ஆம் தேதியும் மூன்றாம் தேதியும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran