1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (10:59 IST)

#DMKkolamProtest: திமுகவினரின் வாசலில் கலக்கும் கோலங்கள்!!

#DMKkolamProtest என்ற ஹேஷ்டேக் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
 
குடியுரிமை திருத்த சட்ட திருத்தத்திற்கு எதிராக நேற்று கல்லூரி மாணவிகள் சிலர் கோலம் போட்டு கைதான நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பல வீடுகளின் முன்பு அந்த சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலம் போடப்பட்டு உள்ளது.
 
இதில், குறிப்பாக முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியின் இல்லம், தற்போதைய திமுக தலைவர் முக ஸ்டாலின் இல்லம், திமுக எம்பி கனிமொழி இல்லம் ஆகிய வீடுகளின் முன்பு குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலங்கள் போடப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இதுமட்டுமின்றி திமுகவினரின் வீட்டு வாசலில் சட்ட திருத்தத்திற்கு எதிரான வாசங்களுடன் கோலம் போடப்பட்டுள்ளது. இதனால் தற்போது சமூக வலைத்தளமான டிவிட்டரில் #DMKkolamProtest, #KolamAgainstCAA என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.