Daily Horoscope

இந்தியா வளருதுன்னா ஏன் துபாய்ல இருக்கீங்க?!.. மாதவனை வெளுத்த ராஜ் தாக்கரே!..

Updated: திங்கள், 3 ஆகஸ்ட் 2026 (13:55 IST)
குஜராத்தில் 3 முறை முதலமைச்சராக இருந்தவர் நரேந்திர மோடி. இப்படி தொடர்ந்து 3 முறை அவர் முதல்வரானதும் அவரை பிரதமராக்க பாஜக முடிவு செய்தது. எனவே, சமூகவலைத்தளங்களில் இந்தியாவை மோடியால்தான் காப்பாற்ற முடியும். மோடி பிரதமராக வந்தால் இந்தியாவே மாறிவிடும்.. இந்தியா வளர்ச்சியை சந்திக்கும் என்பது போல பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் புரமோஷன் செய்யப்பட்டது.

எனவே, வட இந்திய மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர். இதன் காரணமாக நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமாக மாறினார். தொடர்ந்து 3 முறை மோடி பிரதமராக இருக்கிறார். ஒருபக்கம், தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்ப்பு இருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. ஒருபக்கம் பாலிவுட்டில் பல நடிகர்கள் மோடியை தொடர்ந்து பாராட்டி பேசி வருகிறார்கள். தமிழில் கூட மாதவன் உள்ளிட்ட சில நடிகர்கள் மோடியை பாரட்டுகிறார்கள்.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த மகாராஷ்டிர நவநிர்மான் சேனையின் தலைவர் ராஜ் தாக்கரே ‘பிரதமர் மோடி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றதக நீங்கள் நம்பினால் ஏன் குடும்பத்துடன் துபாயில் வசிக்கிறீர்கள்?’ என நடிகர் மாதவன் மற்றும் விவேக் ஓபராய் ஆகியோரை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

இடைத்தேர்தலில் ஜெயிப்பது பெரிய விஷயமில்லை.. அதிமுக, திமுக டெபாசிட் வாங்க கூடாது.. முதல்வர் விஜய் உத்தரவா?

10 ஆண்டுகளாக தீராத ஆக்கிரமிப்பு விவகாரம்.. தவெக அரசில் துணிச்சலுடன் நடவடிக்கை எடுத்த காவல்துறை...

விஜயை ஸ்டாலின் ஒரு தலைவராகவே பார்க்கல!. அதான் பிரச்சனை!.. திருமாவளன் பேச்சு..

1989-ஆம் ஆண்டு முதல் தீராத சொத்து பிரச்சனை.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து புகார் அளித்த பள்ளித்தோழர்...

ஆண்டு வருமானம் ரூ.32 லட்சம்.. ஆனாலும் வாழ்க்கையில் விரக்தி.. புலம்பும் 30 வயது இளைஞர்...

அடுத்த கட்டுரையில்
Show comments