மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்த பப்ஜி மதன்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

madhan
மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்த பப்ஜி மதன்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
siva| Last Updated: வியாழன், 1 ஜூலை 2021 (14:24 IST)
சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும், இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், யூடியுப் மூலம் ஆபாசமாக பேசி சமூக சீர்கேடு செய்ததாகவும் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே
பப்ஜி மதன் மட்டும் பற்றி அவருடைய மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டார் என்பதும் மதனின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே பப்ஜி மதன் மற்றும் அவருடைய மனைவி ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது மனைவி கிருத்திகாவுக்கு மட்டும் ஜாமீன் கிடைத்தது என்பதும் பப்ஜி மதன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இதனிடையில் பப்ஜி மதன் மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு மீது பதிலளிக்க வேண்டுமென சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கை அவர் வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளார். வரும் திங்கட்கிழமை சென்னை சைபர் கிரைம் போலீசார் தாக்கல் செய்யும் பதில் மனுவை பொறுத்தே மதனுகு ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது
இதில் மேலும் படிக்கவும் :