செவ்வாய், 18 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (18:03 IST)

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

China Fake snow

சீனாவில் உள்ள சுற்றுலா தளம் ஒன்றில் பயணிகளை கவர்வதற்காக சோப்பு நுரையை வைத்து போலி பனிப்பொழிவை உண்டாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

 

சீனா நாடு மூன்றாம் உலக நாடுகளிலேயே அதிகமான பொருளாதர வளம் கொண்ட நாடாக உள்ளது. மேலும் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள பல எலெக்ட்ரிக் நிறுவன தயாரிப்புகளுக்கான போலிகள் கூட சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்படியான சீனா சமீபமாக தொடர்ந்து சுற்றுலா பயணிகளை ஏமாற்றுவதற்காக போலியான விஷயங்களை செய்வது அடிக்கடி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

 

சமீபத்தில் சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் என்ற பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக செங்டு பனி கிராமம் திறக்கப்பட்டது. பலரும் பனி பொழியும் கிராமத்தை பார்க்க ஆசையாக வந்தனர். ஆனால் அங்கு உண்மையான பனி இல்லாமல் பருத்தி பஞ்சு, சோப்பு நுரையை வைத்து போலி பனியை உருவாக்கியுள்ளனர்.

 

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் புகார் அளித்ததும் அந்த சுற்றுலா பகுதியை மூடியதுடன், எதிர்பார்த்த அளவு பனி இல்லாததால் அப்படி செய்ததாக மழுப்பியுள்ளனர்.

 

முன்னதாக இதுபோல சீனாவின் ஒரு பூங்காவில் பாண்டா கரடி இல்லாததால் நாய்க்கு கரடி வேஷம் போட்டது, மலை மீது பைப்பை வைத்து செயற்கை நீர்வீழ்ச்சியை உருவாக்கி ஏமாற்றியது உள்ளிட்ட சம்பவங்களு ம் சீனாவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K