’இந்தியன் 2’ பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

indian2
’இந்தியன் 2’ பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Last Modified புதன், 30 ஜூன் 2021 (13:00 IST)

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன் 2 என்ற திரைப்படம் திடீரென நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க திட்டமிட்ட நிலையில் திடீரென லைக்கா நிறுவனம் இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது

தங்களுடைய நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை முடிக்காமல் ஷங்கர் வேறு படங்களை இயக்கக் கூடாது என்று வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் இருதரப்பினரும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துவது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை என்பதால் மீண்டும் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது
இன்றைய விசாரணையின்போது ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்தின் இடையே மத்தியஸ்தம் செய்ய ஆர் பானுமதி என்ற உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இரு தரப்பினரிடையே பேசி நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிப்பார் என்றும் அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஇதில் மேலும் படிக்கவும் :