17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!
கோவையில் 17 வயது சிறுமியை சமூக வலைதளம் மூலம் பேசி பழகி அதன் பின்னர் அறைக்கு வரவழைத்து 7 மாணவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏழு மாணவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
17 வயது சிறுமியுடன் ஒரு மாணவர் சமூக வலைதள மூலம் பழக்கம் கொண்டிருந்தார் என்றும் அந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறிய நிலையில் தனது அறைக்கு வருமாறு சிறுமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த இளைஞரை பார்க்க சிறுமி சென்றபோதுதான் அந்த அறையில் இருந்த ஏழு மாணவர்களும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் தான் காவல்துறையினர் விசாரணை செய்த நிலையில் சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த ஏழு மாணவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்/
இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran