கொரோனாவால் இறந்தவர்களுக்கு நிவாரணமா? வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்த உத்தரவு!

Prasanth Karthick| Last Modified புதன், 30 ஜூன் 2021 (11:23 IST)
இந்தியாவில் கொரோனாவால் பலர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்த வழிகாட்டு முறைகளை உருவாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முதலாக கொரோனா பரவலால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் தனிநபர் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்று விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் மனுதாரர் கோரியப்படி ரூ.4 லட்சம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என கூறியுள்ளனர். அதேசமயம் கொரோனாவால் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்றும், அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :