வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: வியாழன், 1 ஜூலை 2021 (10:33 IST)

நீர்நிலைகளை ஆக்கிரமித்து தாஜ்மஹாலே கட்டினாலும் இடிக்கப்படும்… நீதிமன்றம் கண்டிப்பு!

நீர்நிலைகளை ஆக்கிரமித்து எந்தக் கட்டிடங்கள் கட்டினாலும் இடிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீர்நிலையை ஆக்கிரமித்து நாகப்பட்டினத்தில் ரயில்பாதை அமைக்கப்பட்டு வருவது குறித்து பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அது சம்மந்தமான விசாரணையின் போது நீதிபதி நீர்நிலைகளை ஆக்கிரமித்து தாஜ்மஹாலே கட்டினாலும் இடிக்கப்படும் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்த செய்தி சமூகவலைதளங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

ஆனாலும் ஒரு சிலர் மதுரையில் ஒரு நீதிமன்றமே நீர்நிலையின் மேல்தான் கட்டப்பட்டுள்ளது என இந்த கருத்துக்கு பதிலளித்து வருகின்றனர்.