ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (09:38 IST)

சென்னையை சூழ்ந்த மழை நீர்... 32 மின்மாற்றிகளில் விநியோகம் நிறுத்தம்!

சென்னையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் 32 மின்மாற்றிகளில் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 

 
சென்னையில் நேற்று திடீரென பெய்த கனமழை காரணமாக பல சாலைகள் மழைநீரில் தத்தளித்தது என்பதும் போக்குவரத்து இதனால் ஸ்தம்பித்தது என்பதையும் பார்த்தோம். இதனால் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு இன்று பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் மழை நீர் தேங்கி உள்ளதால் சென்னையில் உள்ள நான்கு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள துரைசாமி துரைசாமி சுரங்கப்பாதை, ஆர்பிஐ சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் இருசக்கர வாகனங்கள் சுரங்கப்பாதை, ஆகிய நான்கு சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு உள்ளது. 
 
மேலும் சென்னை தி.நகர், மேற்கு மாம்பலத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் 32 மின்மாற்றிகளில் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மழைநீர் தேங்கியிருப்பதன் அடிப்படையில் ஒரு மணி நேரத்தில் மின் விநியோகம் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும் என்று மின்சார வாரியம் தகவல் அளித்துள்ளது.