வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2019 (19:02 IST)

’1500 வீடியோக்களைக் காட்டச் சொல்லி போலீஸார் மிரட்டினர் ’ - நக்கீரன் கோபால்

சமீபத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்ற இளம் பெண்கள் மீதான் பாலியல் வன்கொடுமை விவகாரம்  தொடர்பாக திருநாவுக்கரசு, சபரீஸ் செந்தில், உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த செய்தியை தனது  நக்கீரன் ஊடகத்தில் செய்தியாக வெளிட்டது தொடர்பாக நக்கீரன் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தின் ஆசிரியர் நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பினர்.ஏற்கனவே 2 முறை நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பட்ட நிலையில் 3 ஆம் முறையாக சம்மன் அனுப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இன்று நக்கீரன் கோபாலிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். 
 
இதுபற்றி நக்கீரன் கோபால் கூறியதாவது:
பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது யார் என என்னிடம் கேட்கிறார்கள், இதைக் கண்டுபிடிக்கவேண்டியது காவல்துறையின் வேலையாகும். 1500 வீடியோவை எனக்கு யார் கொடுத்தார்கள் என திரும்ப, திரும்ப கேட்கிறார்கள். அந்த 1500 விடியோக்களையும் காட்டச் சொல்லி சிபிசிஐடி போலீஸார் என்னை மிரட்டினார்கள் என்று கூறியுள்ளார். 
 
மேலும் விசாரணை என்ற பெயரில் என்னை குற்றவாளி போல சிபிசிஐடி நடத்தினார்கள்.சில கேள்விகளுக்கு பதில் சொல்லாததால் சிபிசிஐடி போலீஸாரும் மிரட்டினார்கள். என்று தெரிவித்துள்ளார்.