செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2019 (19:03 IST)

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் ரம்யா கிருஷ்ணன்?

‘உயர்ந்த மனிதன்’ படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் ரம்யா கிருஷ்ணன் மிஷ்கின் மனைவியாகவும், ஆபாசப்பட நடிகையாகவும் நடித்திருந்தார். 
 
அதனை தொடர்ந்து தற்போது ‘கள்வனின் காதலி’ பட இயக்குனர் தமிழ்வாணன் இயக்கத்தில் உருவாகிவரும் உயர்ந்த மனிதன் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கிறார்.  படம், தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.